533 total views, 2 views today

பிரதான கண்டி வீதிவழியாக வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து வாகனப் பேரணியாக அழைத்துச் செல்லப்பட்ட பிரதி அமைச்சர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு பள்ளிவாசல் சென்று தொழுகையின் பின்னர் மன்னார் வீதி வழியாக, வைரவர்கோவில் வீதிவழியாக குருமன்காடு சென்று அங்கிருந்து திரும்பவும் மன்னார் வீதிவழியாக கலைமகள் சனசமூக நிலையத்தில் விளையாட்டங்கிற்கு அழைத்து வரப்பட்ட பிரதி அமைச்சருக்கு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகளின் பாண்ட் வாத்தியத்துடனும் பரக்கும் மகாவித்தியாலய மாணவர்களின் கண்டி நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டு தமிழ்ப்பாரம்பரிய நட்டுவமேள தாளத்துடன் நிகழ்வு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
வர்த்தகர் சங்கம், முச்சக்கரவண்டிகள் உரிமையாளர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சிகை அலங்கரிப்பு உரிமையாளர்கள் சங்கம், நகரவரியிறுப்பாளர்கள் சங்கம், என்பன ஒன்றினைந்து மேற்கொண்ட வரவேற்பு நிகழ்வில் வடமாகாணச
பை உறுப்பினர் ம. தியாகராசா, வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன், சமயத் தலைவர்கள, வர்த்தகப்பிரமுகர்கள்,; அனைவரும் கலந்துகொண்டனர்.