582 total views, 2 views today
வவுனியாவில் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசினை வென்றது ஜங்ஸ்ரார்.
A Group construction & consults நிறுவனம் நடாத்திய அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் ஜங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் வென்று ஒரு லட்சம் ரூபா பணப்பரிசினை வெற்றி கண்டுள்ளது.
நேற்று (05-01-2019) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பித்த இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் அனைத்து போட்டிகளும் நேற்றும் இன்றும் முழுநேரமாக இடம் பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய மருதநிலா மற்றும் ஜங்ஸ்ரார் விளையாட்டுக் கழகங்கள் மோதியதில் ஜங்க்ஸ்ரார் கழகம் இரண்டு கோல்களை போட்டு 02க்கு 0 என்ற ரீதியில் வெற்றி பெற்று ஒரு லட்சம் ரூபா பணப்பரிசுடன் வெற்றிக்கேடயத்தையும் இரண்டாம் இடத்தை பெற்ற மருதநிலா 50 ஆயிரம் ரூபா பணப்பரிசையும் இரண்டாவது வெற்றிக்கிண்ணத்தையும் வென்றுள்ளது.
இவ் நிகழ்வில் விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், தமிழ் விருச்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் யுனிபைட் விளையாட்டு கழகத்தின் மூத்த விளையாட்டு வீரர்கள் விளையாட்டு உத்தியோகத்தர்கள். A Group construction & consults நிறுவனத்தின் பணிப்பாளர் பத்மநாதன் தயாபரன் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .