1,015 total views, 2 views today
உயிருடன் இருக்கும் மாமியாருக்கு மரண அறிவித்தல் ஒட்டிய மருமகன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மரண அறிவித்தல் ஒட்டியதன் மூலம் மருமகன் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பொலநறுவை, வெலிகந்த, ருவன்பிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
உயிருடன் இருக்கும் தனது மாமியார் உயிரிழந்து விட்டதாக மரண அறிவித்த அச்சிட்டு மருமகன் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த மருமகன் சங்கம் ஒன்றிடம் மாமியாரின் மரணம் தொடர்பில் போலி தகவல் வெளியிட்டு 22000 ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவரினால் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது மாமியார் கடந்த 18ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அவரது மருமகன் மரண அறிவித்தல் அச்சிட்டு சங்கத்திடம் ஒப்படைத்தார். எனினும் அவரது மனைவியினால் உண்மை தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரி முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.