2,229 total views, 2 views today
வரலாற்றுச்சிறப்புமிக்க
புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின், ஆலய வளாகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் ஆலய அலங்கார நுழைவாயில்திறப்புவிழா
ஆலய அன்னதான மடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
ஆலய வரலாற்று நூல் வெளியீட்டு விழா என்பன இடம்பெறவுள்ளன.
ஆலய அலங்கார நுழைவாயில் திறத்தல்
A9 வீதி, புதூர்ச் சந்தியில் அமைக்கப்பட்டு
ஆலய அமைவிடத்தையும், அதற்கான வழியையும்
காட்டி நின்று, வருவோரை வரவேற்கும்
அலங்கார நுழைவாயில் திறப்பு விழா
காலை 8.30 மணிக்கு இடம்பெறும். , புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின் தலைவரும் பூசகருமான இ.பூலோகசிங்கம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், பூசை வழிபாடுகள், மங்கள விளக்கேற்றல், தேவாரம் இசைத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து வவுனியாத்தமிழ்ச்சங்கத்தின் அமைப்பாளர் தமிழருவி த.சிவகுமாரன் திறப்புரையினை நிகழ்த்துவார். அலங்கார நுழைவாயிலை, வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவும் வவுனியா வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் ச.தணிகாசலமும் இணைந்துதிறந்து வைப்பர். பெயர்கல் திரைநீக்கத்தினை லண்டனில் வாழும் திரு,திருமதி.கோபால் பிறேமா தம்பதி மேற்கொள்வர். நன்றியுரையினைபுதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயப் போசகர் க.கிருபாகரன் நிகழ்த்துவார்.
ஆலய அன்னதான மடத்திற்கு அடிக்கல் நாட்டல்
ஆலயத்தின் தனிப்பெரும் மரபாகவும் பண்பாடாகவும் தொன்றுதொட்டு விளங்கிவரும் மகேஸ்வரபூசையாம் அன்னதானத்தைசிறந்தமுறையில் நிகழ்த்த, அதற்கென சிறப்பாக அமையவுள்ள அன்னதான மடத்திற்கு அடிக்கல்நாட்டுதல் காலை 10.00 மணிக்கு ஆலயத்தில் இடம்பெறும் இ.பூலோகசிங்கம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்ச்சியில் பூசை வழிபாடுகள், மங்கள விளக்கேற்றல், திருமுறைகள்இசைத்தல் ஆகியவற்றைத்தொடர்ந்து வடமாகாணத்தின் மாண்புமிகு முதலமைச்சர், கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அன்னதான மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைப்பார். வாழ்த்துரையினை தமிழருவி த.சிவகுமாரன் நிகழ்த்துவார். நன்றியுரையை புதூர் ஸ்ரீநாகதம்பிரான் ஆலயத்தின் செயலாளர் ச.தவேந்திரராசா நிகழ்த்துவார்.
ஆலய வரலாற்று நூல் வெளியீடு செய்தல்
ஈழத்தின் புகழ்பூத்த பாரம்பரியம்மிக்க புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின் ஆலய வரலாறு தோற்றம், வளர்ச்சி, அன்னதான பணி,பண்டமெடுப்பு, பொருட்கள் சேகரித்தல், வேளைக்கயிறு ஆகிய பல அதிசய வரலாறுகளைக் கொண்டு வெளிவரும் முதல் வரலாற்றுநூல்காலை 11.00 மணிக்கு ஆலய மண்டபத்தில் வெளியீடு
செய்துவைக்கப்படும். புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின் கணக்காய்வாளர், ந.ஞானசுந்தரம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பூசைவழிபாடுகள், மங்கள விளக்கேற்றல், திருமுறைகள் ஓதல் ஆகியவற்றைத்தொடர்ந்து வரவேற்புரையினை புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம்போசகர் க.கிருபாகரனும் ஆசியுரையினை புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின் உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ.இ.பத்மகுமாரக்குருக்களும் நிகழ்த்துவர்.
தலைமையுரையையடுத்து, நூலிற்கான வெளியீட்டுரையையும் நயவுரையையும் தமிழருவி த.சிவகுமாரனும் .சிறப்பு உரையினை புதூர் ஸ்ரீநாகதம்பிரான் ஆலய மூத்த உறுப்பினர் ம.செல்வரத்தினமும் நிகழ்த்துவர். முதற்பிரதிகளை, வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேச்வரிசமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில், கௌரவ செயலாளரும் ஆதீனகர்த்தாவுமான ஆறுமுகம் நவரெத்தினராசா, வவுனியா சுகாதாரத்திணைக்களத்தின் வைத்தியகலாநிதி மு.மதிதரன் ஆகியோர் பெறுவார்கள்.
சிறப்புப்பிரதிகள் வழங்கலைத் தொடர்ந்து நன்றியுரையை புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின் பொருளாளர் கு.நாகநாதன் நிகழ்த்துவார்.ஆலயத்தின் வருடாந்தப் பெரும் பொங்கல் விழா மறுதினம் 11 ஆம் திகதி வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆலய பரிபாலனசபையினர் மேற்படி அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனைவரையும் வரும்படி அன்புடன்அழைக்கின்றார்கள்