2,854 total views, 2 views today
ஈழத்திலிருந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தை வெளிப்படுத்தும் பதிய காணொளி பாடலொன்று உருவாகிவருகின்றது.
பார் போற்றும் தலைவன்
சொல்லிய வீரம்
மார்தட்டிக்கொண்டு
மறுபடி பிறக்கும்
போரது தந்த சாம்பலில் இருந்து
புறப்பட்டு நீயும் வா வா தமிழா… என்று ஆரம்பிக்கும் இப்பாடலின் காட்சிகள் வலிசுமந்த உறவுகளைக்கொண்டு ஜதார்த்தமாக படமாக்கப்பட்டு மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது.
படைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான இக் காணொளிப் பாடலின் முதற்பார்வை சுவரொட்டி சற்றுமுன் வெளியாகியுள்ளது.
இக் காணொளிப்பாடல் மிதுனாவின் இயக்கத்தில்
சஞ்சய்,மிதுனா,கபில், ஷாம்,ஜினு,நியூட்டன்,புவிகரன்,தமிழ்மதி மற்றும் மூங்கிலாறு மக்களின் ஜதார்த்த நடிப்பில்
இசையமைப்பாளர் சிவா பத்மஜன் அவர்களின் இசையில் கவிஞர் மாணிக்கம் ஜெகனின் எழிற்சி வரிகளுடன் கோகுலன் , மாணிக்கம் ஜெகன் ஆகியோரின் குரலில் ஸ்ரான்டட் வீடியோ நிறுவனத்தின் ஒளிப்பதிவிலும் சசிகரன் யோவின் ஒளித்தொகுப்பிலும் சஞ்சயின் வடிவமைப்பில்
ஜினு,யூட் ஜெனிஸ்ரன்,சஜிர் ஆகியோரின் இணை இயக்கத்தில் உருவாகி படைப்பாளிகள் உலகத்தினால் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.