1,816 total views, 2 views today
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டிருப்பதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறியுள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் அவசரகால சட்டத்தை நீடித்ததானது, இதனை செய்வதற்கு தேவையான காலத்தைப் பெற்றுக் கொள்வதற்கே எனவௌம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் பதவியில் இருந்து விலகிய போதிலும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவதை நிறுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இதன்போது தெரிவித்துள்ளார்.