161 total views, 2 views today
கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட உலகின் மிக குறைந்த வயது நோயாளியான 35 நாள் குழந்தை குணம் பெற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு 5ஆவது நாளில் நுரையீரலில் கடுமையான கொரானா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அறையில் சிறப்பு மருத்துவர் குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஒருமாத கால தீவிர சிகிச்சைக்கு பிறகு நோய் தொற்றில் இருந்து விடுதலை பெற்ற பச்சிளம் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு முன்பு, பிறந்த சில மணிநேரத்தில் கொரானா தொற்று கண்டறியப்பட்ட பெண் குழந்தை மருந்துகளின் உதவியின்றி குணம்பெற்றது குறிப்பிடத்தக்கது.