92 total views, 2 views today
தங்களது உறவுகளை நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அவர்களால் குறித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
.
கடந்த ஆண்டு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற சூழ்நிலையிலும், வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தங்களது உறவுகளை நினைவுக்கூர முடிந்தது. அந்தநிலைமை இந்த ஆண்டும் தொடர வேண்டும்.
மீண்டும் யுத்தம் ஒன்றையோ பயங்கரவாத செயற்பாடுகளையோ விரும்பாத மக்கள், போர்காலத்தில் உயிர்நீத்த தங்களது உறவினர்களை நினைவுகூரும் உரிமையை கொண்டிருக்கின்றனர்.
அந்த உரிமையை உறுதி செய்வதன் மூலும் சிறந்த தலைவர் என்ற மதிப்பை ஜனாதிபதியால் தமிழ் மக்கள் மத்தியில் பெற முடியும் என்று எஸ்.சிறிதரன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..