167 total views, 2 views today
பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்திலிருந்து(vip) பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்களென விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ.சந்திரசிறி(Maj. Gen. (Retd.) GA Chandrasiri) குறிப்பிட்டார்.
இனிமேல், சலுகை பெற்ற உயரதிகாரிகள் மட்டுமே முனையத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் உட்பட சாதாரண மக்கள் அந்த வளாகத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விமான நிலையத்தில் வருகை தருபவர்களை வரவேற்க வேண்டுமானால், விமான நிலையத் தலைவர், துணைத் தலைவர் அல்லது மேலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.