232 total views, 2 views today
தென்னிந்தியாவில் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் தனுஷ், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே.
மேலும் இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர், இந்நிலையில் தனுஷ் தற்போது தன் மனைவியை விட்டு பிரிவதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதுகுறித்த நடிகர் தனுஷுன் ட்விட்டர் பதிவில்,
‘18 வருடங்களாக நண்பர்களாக, இணையர்களாக, பெற்றோர்களாக, ஒருவொருக்கொருவர் நலம் விரும்பிகளாக நாங்கள் இணைந்து வாழ்ந்து வந்தோம், இந்தப் பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரித்தல், ஏற்றுக்கொள்ளுதல் என்பதாக இருந்தது. இன்று நாங்கள் எங்களுடைய பாதையில் பிரிந்து செல்லவேண்டிய இடத்தில் நிற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
தவிர, ஐஸ்வர்யாவும், நானும் ஒரு தம்பதியாக பிரிந்து செல்ல முடிவுஎடுத்துள்ளோம். தனிப்பட்ட முறையில் எங்களை கூடுதலாக புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொண்டுள்ளோம். எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள், இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு எங்களுக்கு தனிமையைக் கொடுங்கள்’’ என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபகாலமாக தனுஷ் பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்ததாக எந்த நடிகையை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் அல்லது தொகுப்பாளினி டிடி, யையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.