196 total views, 2 views today
இந்தியாவில் இரண்டு தமிழ் பெண்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் முகநூலில் வைரலாக பரவி வருகின்றது.
இச்சம்பவம் தமிழகம் சென்னையில் சமீபத்தில் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தள பதிவுகளை முன்னிலைப்படுத்தி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் குறித்த இரு பெண்களும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில் இவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இரண்டு பெண்களும் இவ்வாறு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.