164 total views, 2 views today
KFC கடையில் சிக்கன் சாப்பிட்ட குறும்பட நடிகர் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு பலியான சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம் சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் . 22 வயதான இவர் பி.எஸ்.சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு கேமராமேனாக பணிபுரிந்து கொண்டே, குறும்பட நாயகனாகவும் நடித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை பெரம்பூர் பிபி சாலையில் உள்ள தனது நண்பரான கிரிதரன் என்பவரது வீட்டிற்க்கு சென்றதாக கூறப்படுகின்றது. அப்போது கே.எப்.சி யில் சிக்கன் ஆர்டர் செய்த அவர், நண்பரின் வீட்டின் அருகே அமர்ந்து நண்பர்களுடன் சிக்கன் சாப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து சாப்பிட்ட பின் ரஞ்சித்துக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. உடனடியாக குளிர்பானம் வாங்கி அருந்தி உள்ளார். அப்போது தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஞ்சித், தனக்கு ஜீரணக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறி குடிப்பதற்கு வெண்ணீர் வைக்க கூறி உள்ளார்.
உடனடியாக நண்பர்களிடம் கூறிவிட்டு வீட்டிற்குச் புறப்பட்டுச் சென்ற ரஞ்சித், இரவு 10 மணியளவில் , தனக்கு உடலுக்கு முடியவில்லை என்று கூறியி நிலையில் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தபடி அவதிக்குள்ளான ரஞ்சித்தை உடனடியாக அவரது அண்ணன், அருகில் உள்ள தனியார் மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் நிலை மோசமாக உள்ளதாக கூறியதின் பேரில் உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கூட்டிச் சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தங்கள் மகன் சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறி வியாசர்பாடி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி காவல்துறையினர், இளம் நடிகர் ரஞ்சித்தின் திடீர் உயிரிழப்பு குறித்து விசாரணையை முன்னெடுத்தனர்.
ரஞ்சித் உயிரிழப்பிற்கு அவர் கே.எப்.சியில் ஆர்டர் செய்து சாப்பிட்ட சிக்கன் தான் காரணமா ? என்று விசாரித்த போது அவருடன் சிக்கன் சாப்பிட்ட நான்கு பேரில் ரஞ்சித் மட்டுமே உயிரிழந்த நிலையில் மற்ற மூன்று பேரும் நலமாக உள்ளனர் என்பதும், அவர் சிக்கன் சாப்பிடுவதற்கு முன்பாகவே முதுகுபகுதி கடுமையாக வலிப்பதாக நண்பர்களிடம் கூறியதும் தற்போது தெரியவந்துள்ளது.
இதனால் ரஞ்சித் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள காவல்துறையினர் பிணக்கூறாய்வின் அடிப்படையில் ரஞ்சித் உயிரிழப்புக்காண காரணம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.