213 total views, 4 views today
எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாடு மூடப்படும் பட்சத்தில், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தகைய சூழ்நிலைக்குள் நாடு தள்ளப்படாமல் இருக்க, மக்கள் தடுப்பூசி அளவை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
எந்த வகையான வைரஸ் பரவுகிறது என்பது முக்கியம் அல்ல, ஆனால் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நேற்றையதினம் மேலும் 942 கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.