40 total views, 2 views today
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடுகளைமேற்கொள்ளவேண்டுமென்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியது. இதன்போது உரையாற்றியபிரதமர் ரணில் விக்ரமசிங்க,
உலக வங்கி அவசர தேவைகளுக்காக நேற்று 160 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. எனினும் அதனை பெட்ரோல் இறக்குமதிக்காக பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கிறோம்.
மேலும் நாம் இதனை எதிர்பார்க்கின்றபோதும் இன்று உலக வங்கி அதிகாரிகளுடன் கொழும்பில்இடம்பெறவுள்ள சந்திப்பின்போது அவர்களிடம் இது தொடர்பில் கோரிக்கையை முன்வைக்கவுள்ளேன்.
அவர்கள் இணங்கினால் பெட்ரோல் விநியோகத்தில் உள்ள பிரச்சினையை தற்காலிகமாக தீர்க்கமுடியும். இல்லையேல், பெட்ரோலுக்காக நிதியை தேடும் பணியில் ஈடுபடவேண்டியிருக்கும்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்காதபோதும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரியதுபோன்று, ஐக்கியமக்கள் சக்தியின் ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரை இணைத்துசெயற்படுவதில் எமக்கு பிரச்சினையில்லை.
இதேவேளை, கட்சிகளின் பிரதிநிதிகளின் கீழ் மாவட்ட மட்டத்தில் குழுக்களை அமைத்து பொருளாதாரபிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியை மேற்கொள்ளவுள்ளளோம் என்றார்.
இதற்கிடையில், நாட்டின் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு நீரிழிவுநோய் தொடர்பான மருந்தை பெற்றுத்தரவேண்டும் என்று அவர், எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம்கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, தாம் உயிர் காக்கும் கருவிகளையே வைத்தியசாலைகளுக்குவிநியோகித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையின்படி, குறித்த ஒரு மருந்தை பெற்றுக்கொடுக்கமுயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடுகளைமேற்கொள்ளவேண்டுமென்று சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் வைத்து கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் சர்வதேசசமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.