34 total views, 2 views today
நிதியமைச்சராக இன்று ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் மத்திய வங்கி ஆளுநரில் மாற்றம்ஏற்படலாம் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு பதிலாக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இந்திரஜித் குமாரசுவாமி இலங்கை தமிழர் அவர், இவர் கொழும்பு றோயல் கல்லூரி, இங்கிலாந்துஹரோ பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்று பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம்பெற்றார். பின்னர் இங்கிலாந்து சசெக்சு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.
அத்தோடு மத்திய வங்கியின் பதினான்காவது ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஜூலை 2016 இல்கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இவர் ரணில் மற்றும் மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தார்.
மேலும் 1974 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் அதிகாரியாக சேர்ந்த இந்திரஜித் குமாரசுவாமி மத்தியவங்கியின் புள்ளியியல் மற்றும் வங்கி மேற்பார்வை துறைகளில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார் என்பதுசுட்டிக்காட்டத்தக்கது.